| Other things |
|
|
| Other things |
|
|
| Other things |
| தொடுப்புக்கள் |
| Other things |
| தொடுப்புக்கள் |
| Other things |
| தொடுப்புக்கள் |
|
| விடுதலைப் புலிகளை தடை செய்ய சிறிலங்கா அரசு யோசனை - புதினம் |
| Saturday, December 2, 2006 |
(சனிக்கிழமை, 2 டிசெம்பர் 2006) தமிழீழ விடுதலைப் புலிகளை முடிந்தவரை ஒடுக்கும் முயற்சிகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகிறது. அனைத்து வழியிலும் அழித்தொழிக்கும் அரசின் திட்டங்களில் ஒன்றாக, விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து யோசித்து வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யக்கோரும் சிறப்பு அறிக்கை ஒன்று சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றிய விவாதம் நடந்துள்ளது.
இந்த மனு குறித்து மகிந்த இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிகிறது.
தொடர்ந்து நடைபெற்று வரும் தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களையும் அதனால் ஏற்பட்ட இழப்புகளையும் காரணம் காட்டி, அதனடிப்படையில் விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், சமாதான செயலக பதில் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் ஆகியோரது மரணங்கள், இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் மீதான தற்கொலைத் தாக்குதல் மற்றும் கெப்பிட்டிக்கொல்லாவ கிளைமோர் தாக்குதல் ஹபரணையில் கடற்படையினர் மீதான தாக்குதல் போன்றவை இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சமாதான நடவடிக்கைகளில் எவ்வித ஈடுபாடும் காட்டாமல் மூத்த அரச தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகளைக் குறிவைக்கும் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை சமூகத்தில் உலவ விடுவது பேராபத்தாகும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இதில் சிறிலங்கா அதிபரும் உறுதியாக உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளை நிபந்தனைக்கு உட்பட்ட தடையை விதிக்க சிறிலங்கா அரசு யோசித்து வருகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டால், நோர்வே உட்பட எந்த ஒரு வெளிநாடும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது என்பதுடன் வெளிநாட்டு தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் விடுதலைப் புலிகளை சந்திப்பதற்கோ அவர்களது கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதற்கோ அனுமதி மறுக்கப்படும் நிலை ஏற்படும். விடுதலைப் புலிகளைத் தடைசெய்யும் முடிவை அரசாங்கம் எடுத்தால் அது புலிகளுக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும். |
posted by தமிழினி @ 8:22 PM  |
|
|
|
|
|