| Other things |
|
|
| Other things |
|
|
| Other things |
| தொடுப்புக்கள் |
| Other things |
| தொடுப்புக்கள் |
| Other things |
| தொடுப்புக்கள் |
|
| விடுதலைப் புலிகளின் படைபலத்தை பலவீனப்படுத்த வேண்டும்: சரத் பொன்சேகா - புதினம் |
| Saturday, December 2, 2006 |
சனிக்கிழமை, 2 டிசெம்பர் 2006 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாரனது இராணுவ பலம் பலவீனப்படுத்தப்பட்டாலே அன்றி நாட்டில் அமைதி பிறக்காது என சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு முடிவு காண அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், சமாதானப் பேச்சுக்கள் தொடர வேண்டும் என்னும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசிய சரத் பொன்சேகா "அமைதிக்கு வழி காண வேண்டுமெனில், விடுதலைப் புலிகள் தங்களது இராணுவத்தைப் பலப்படுத்த அனுமதிக்கக்கூடாது. இது சிறிலங்காவின் படையைப் பலவீனப்படுத்துகிறது" என்று கூறினார்.
அமெரிக்காவுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சரத் பொன்சேகா, அங்கு அமெரிக்காவின் அரசியல் விவாகர பிரதி செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ், அமெரிக்க இராணுவ கட்டளை அதிகாரி ஜெனரல் பீற்றர் சூமேக்கர் ஆகியோரைச் சந்தித்து பேசியபோது இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு சரத் பொன்சேகா விளக்கி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகால யுத்த நிறுத்தத்தில் விடுதலைப் புலிகள் தங்கள் படைபலத்தைக் குறிப்பிடத்தக்க அளவு பலப்படுத்தியுள்ளனர்.
பீரங்கிகள் 10 இலிருந்து 100 ஆக உயர்ந்துள்ளது. 122 மி.மீற்றர் துப்பாக்கிகள் இரண்டிலிருந்து 20 ஆகியுளள்ன. 20 கனரக மோட்டார்கள் 80 ஆக உயர்ந்துள்ளன. விடுதலைப் புலிகள் வலிமையான போராளிகளாக வளர நான்கு ஆண்டுகால யுத்த நிறுத்தம் உதவியுள்ளது என சரத் பொன்சேகா குறிப்பிட்டதாக வாசிங்ரனில் உள்ள சிறிலங்கா தூதரக அறிக்கை தெரிவிக்கிறது.
எனவே அரசாங்கம் தனது படை பலத்தை சோதிப்பது அவசியமாகிறது. விடுதலைப் புலிகளின் படை பலமிக்கதாக வளரவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காவது இந்தச் சோதனை அவசியம் என அவர் கூறியுள்ளார். |
posted by தமிழினி @ 8:29 PM  |
|
|
|
|
|