| Other things |
|
|
| Other things |
|
|
| Other things |
| தொடுப்புக்கள் |
| Other things |
| தொடுப்புக்கள் |
| Other things |
| தொடுப்புக்கள் |
|
| தீவகத்தில் கடற்படையினர் ஒத்திகை. - சங்கதி |
| Saturday, December 2, 2006 |
03 December 2006 யாழ் தீவுப்பகுதி மீதான தாக்குதல் நடவடிக்கையொன்றை எதிர்பார்த்து கடற்படை பெரும் எடுப்பிலான ஒத்திகை நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக நடாத்திவருகின்றது. குறிப்பாக ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் போன்ற கடற்படைத்தளங்களிலேயே இவ்வாறான போர் ஒத்திகைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
கடற்படைத்தளங்களிலேயே இவ்வாறான போர் ஒத்திகையின் போது பரவலாக தீர்க்கப்பட்ட வேட்டுக்களால் கரையோரப் பகுதிகளிலுள்ள மக்களது. குடியிருப்புக்களின் கூரைகள் பலவும் சேதமடைந்தன இச் சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவரும் தாக்குதலில் படுகாயமடைந்தார்.
முகாம் வீதியைச் சோர்ந்தவரான கோகன் திருவருட்ச்செல்வி (31) என்பவரே காயமடைந்து யாழ்போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடல்வழியான தரையிறக்க முனைப்புக்களை எதிர்கொள்ளும் வகையிலேயே ஒத்திகைகளில் பெருமளவிலான கடற்படையிர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கடந்த ஓகஸ்ட் 11ம் திகதி விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குள்ளான மண்டைதீவு கடற்படைத்தளம் பெரும் சேதங்களைச் சந்தித்திருந்தது. இந் நிலையில் மீள அக்கடற்படைத்தள முன்னைய நிலைகள் அண்மைய நாட்களில் கடற்படையினரால் மீளமைக்கப்பட்டுவிட்டன இத்தகையதோர் பின்னணியிலே மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் கடற்படை பெரும் எடுப்பிலான ஒத்திகைகளை நடாத்தி வருவதாகக் தெரிவிக்கப்படுகின்றது. |
posted by தமிழினி @ 8:52 PM  |
|
|
|
|
|