தலைப்புச் செய்திகள்/Head Lines

பெரும்பாலான ஊடகங்களின் செய்திகள் அனைத்தும் ஒரே இடத்தில்...

 
Other things
Other things
Other things
தொடுப்புக்கள்
Other things
தொடுப்புக்கள்
Other things
தொடுப்புக்கள்
கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல்
Thursday, November 30, 2006
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச உயிர்தப்பியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச சென்று கொண்டிருந்த வாகனத் தொடரணியை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில் உள்ள தர்மபால மாவத்தை பிந்தல சந்திக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.35 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 14 பேர் காயமடைந்துள்ளனர். 8 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

சம்பவத்தில் உயிர் தப்பிய கோத்தபாய ராஜபக்ச ஊடகமொன்றுக்கு கூறியதாவது:
கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக வந்து கொண்டிருந்தேன். எனது வாகனத்துக்கு முன்பாக சென்று கொண்டிருந்த வாகனங்களே கடுமையான சேதங்களுக்கு உள்ளாகின. எனது வாகனமும் சேதத்துக்குள்ளானது.

வாகனத்தின் ஓட்டுநருக்கே வாகனத்தின் சேத விவரம் குறித்து தெரியும். எனக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றார்.

குண்டுத் தாக்குதல் நடத்த வந்தோர் முச்சக்கர வாகனத்தில் வந்ததாக சிறிலங்கா இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.

-புதினம்
posted by தமிழினி @ 11:57 PM   0 comments
Links
About Me

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
Previous Post
Archives
Links
படதொடுப்புக்கள்

ஈழவலி

ஈழவலி

© தலைப்புச் செய்திகள்/Head Lines